பட்டாக்கத்தி, துப்பாக்கியால் தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகேயுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கத்தியாலும், துப்பாக்கியாலும் தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கேன்டீனில் அமர்ந்திருந்த சக மாணவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சில மாணவர்கள் தொடர்ந்து தாங்கள் வைத்திருந்த பட்டா கத்திகளை கொண்டும் கண்மூடித்தனமாக தாக்க முயன்றனர்.
அதில் கைத்துப்பாக்கியை வைத்து இருந்த மாணவன் ஒருவன் எதிர்தரப்பு மாணவர்களை சுடும் நோக்கில் விட்டுச் சென்றுள்ளார். கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




