வீரபாண்டி ஆ. ராஜாவின் தொண்டர் தீக்குளிக்க முயற்சி

நேற்றைய தினம் திமுக கட்சி மேலிடத்தில் இருந்து சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ஆ.ராஜா நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு அவர் தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.இன்று சேலத்திலும், ஓமலூரிலும் அவரின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

இன்று வீரபாண்டி ஆ. ராஜாவின் தொண்டர்கள் வீரபாண்டி ஆறுமுகம் சிலையின் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் பொழுது திலீப் என்ற அவரது தொண்டர் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். பின் அருகிலிருந்தவர்கள் அவரின் மேல் தண்ணீரை ஊற்றி அவரை அமைதிப்படுத்த செய்தனர், இந்த சம்பவம் அருகில் இருந்தவர்களிடையயே பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply