திருவாடானையில் டி.எஸ்.பி, முன்னாள் மாணவிக்கு பாராட்டுவிழா

திருவாடானை ராஜன் மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பியாக பதவி ஏற்றதற்கு நிர்வாகம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே சிறிய கிராமமான திருவடிமிதியூர் தொத்தார்கோட்டை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (55), வாசுகி (50) தம்பதிகளின் வாரிசு ராஜபிருந்தா (26.) இவர் தற்போது குரூப் 1 தேர்வில் 85 வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்று டி.எஸ்பி ஆக பதவி ஏற்க உள்ளார்.

இவர் 1ம் வகுப்பு முதல் 8ம் வரை திவாடானை ராஜன் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். அதனால் இவரை பெருமை படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் இன்று திருவாடானை டி.எஸ்.பி புகழேந்திகணேஷ் தலமையில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள். இந்த விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.


Leave a Reply