விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்களை மீட்ட போலீசார்
கேசவன்,இவரது மனைவி புஷ்பா இவர்கள் இருவரும் சேலம் பட்டை கோவில் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.சமீப காலங்களில் இவர்கள் வீட்டிலேயே விபச்சாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலை அடுத்து அவர்கள் வீட்டில் சோதனை செய்த போது இளம்பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட வைத்தது உறுதியானது.
பின் கேசவன் அவரது மனைவி, புஷ்பா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் . மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப்பட்டிருந்த இளம்பெண்களையும் மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




