திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகவும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று மாலையில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி அருகில் உள்ள தோட்டத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உடல்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகவும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் சமரசத்திற்கு பின்னர் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்படும் நிலையில் போலீசார் மர்ம நபர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.