--- --:--:-- --

பிரசித்தி பெற்ற பாலமுருகன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் !!!

16

கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமுருகன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

கோவை மாவட்டம் சுன்டாக்காமுத்தூர் பகுதியில் மிக தொன்மையான பாலமுருகன் திருக்கோவில் உள்ளது.இங்குள்ள பாலமுருகனை வேண்டினால் மருதமலை தரிசனத்தையும் மற்றும் சகல சௌபாக்கிய புண்ணியத்தை பெறலாம் என்ற ஐதீகம் உள்ளது.இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவில் புனரமைக்கப்பட்டு திருக்கோயில் ஆசனாகிய பொன் மணிவாசக அடிகளார் தலைமையில் இன்று முதலாம் ஆண்டு நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக யாக சாலையில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு, மேள,தாளங்களுடன் கோவில் நிர்வாகிகள் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு,திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கோவில் தலைவர் குமாரசாமி,ஆனந்தவடிவேல்,செயலாளர் தண்டபாணி, பொருளாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon