“கொலையாளிகளை தூக்கில் போடுங்கள்; இல்லையேல் சட்டத்தை தீயிட்டு கொளுத்துங்கள்!” நிர்பயாவின் தாய் ஆவேசம்!!
Nirbhaya Parents Asha devi and Badrinath at the Parliament house in new delhi on Tuesday. Express Photo by Prem Nath Pandey. 22.12.2015.
நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் நிர்பயாவின் தாயார் ஆவேசமடைந்துள்ளார்.தூக்குத்தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்;இல்லாவிட்டால் அரசியல் அமைப்பு சட்டத்தையே தீயிட்டு கொளுத்துங்கள் என கண்ணீர் விட்டு கதறியபடி ஆவேசமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்பயா கொலையாளிகளின் தூக்குத்தண்டனை நாளை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் மீண்டும் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளது. ஏற்கனவே தேதி தள்ளிப்போன போது நிர்பயாவின் தாய் ஆஷாதேவி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இன்றாவது தூக்கு உறுதி செய்யப்படும் என எதிர்பார்த்து இன்று காலை முதலே டெல்லி நீதிமன்றத்தில் ஆஷாதேவி தவமிருந்தார். ஆனால் தூக்குத் தண்டனைக்கு இன்றும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால் ஆஷாதேவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்த ஆஷாதேவி, குற்றவாளிகளை டெல்லி அரசும், கெஜ்ரிவாலும் காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், குற்றவாளிகளை தூக்கில் போட விடமாட்டோம் என தம்மிடமே கூறியதாக தெரிவித்த ஆஷாதேவி,”கொலையாளிகளை உடனே தூக்கில் போடுங்கள்; இல்லையேல் அரசியல் அமைப்பு சட்டத்தை தீயிட்டு கொளுத்துங்கள் என கதறி அழுதபடி ஆவேசமாக கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




