தனது செல்ல நாயை காப்பாற்றிய கால்நடை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வெதர் டக் நிறுவன சிஇஓ 42 கோடி ரூபாய் செலவிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான வெதர் டக் சிஇஓ டேவிட் , ஸ்கவுட் என பெயரிட்டு வளர்த்து வந்த நாய்க்கு இதயத்தில் கட்டி வளர்வதோடு ரத்தக் குழாயில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து பூரண நலம் பெற்றது. அதனை காப்பாற்றிய மருத்துவர்களை பாராட்ட எண்ணிய டேவிட் சூப்பர் பவுல் கால்பந்தாட்ட போட்டியில் நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 42 கோடி ரூபாய் செலவில் விளம்பரம் வெளியிட்டார்.