ஆரணி அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நீசல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளிகளில் கல்வி மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவர் ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என தலைமையாசிரியர் தெரிவித்திருந்தார்.
அதன்படி பள்ளியில் படிக்கும் மாணவி மதுமிதா 447 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். இதையடுத்து அவர் ஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆசிரியர்கள் சால்வையணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர் அனைத்து வகுப்பிற்கும் சென்று மாணவ, மாணவிகளின் வருகை பதிவேட்டை மாணவி மதுமிதா ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தேசிய கொடியையும் அவர் ஏற்றி வைத்தார்.