பெண்களின் ஆளுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம் தானம் அறக்கட்டளை மற்றும மாவட்ட காவல் துறை சார்பில் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன் தொடங்கிய விழிப்புணர்வு நடை பயணத்தை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் துவக்கி வைத்தார். ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பேரணி நிறைவடைந்தது. அங்கு நடந்த கருத்தரங்கில் நெய்தல் பரஸ்பர ஒருங்கிணைப்பாளர் ஆ.பாரதி வரவேற்றார். தானம் அறக்கட்டளை அணி தலைவர் உ.வெள்ளையப்பன் விளக்கவுரை பேசினார்.
மகளிர் சமுதாய, பொருளாதார மேம்பாடு பெறச் செய்தல், பெண்களுக்கு எதிரான வன்மைகளை தடுத்தல் குறித்து ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் எம். ராஜேஸ்வரி , பரமக்குடி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பி. தீனதயாளன், மாவட்ட சமூக நலத் துறை பெண்கள் நல அலுவலர் ஆர்.மங்கையர்கரசி, தானம் அறக்கட்டளை திட்டத்தலைவர் பி.பிரேமானந்த், யுனி மணி வங்கி காசாளர் ஆர்.எஸ்தர் ராஜாத்தி, களஞ்சியம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.ராமச்சந்திரன், கடற்புறா வாழ்வாதார மேம்பாட்டு திட்ட மூத்த அணித்தலைவர் பி.பிரகலாதன் ஆகியோர் பேசினர். கடற்புறா வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் (ராமேஸ்வரம்) எஸ்.தென்னரசி நன்றி கூறினார்.