--- --:--:-- --

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரணி: ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்றது

4

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரத்தில் பேரணி நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ.என்.ஆரிப் கான் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முஹமது பசீர், யாசர் அராபத், ரஹ்மான் அலி, மன்சூர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரம் டி-பிளாக் சந்திப்பில் தொடங்கிய பேரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியரகம் நுழைவு வாயில் முன் நிறைவடைந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பெண்கள் உள்ளிட்டோர் கைகளில் தேசியக்கொடி ஏந்தி தேசிய குடியிரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாநில நிர்வாகி இ.பாரூக் பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon