675 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் உறுதிமொழி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 675 அடி நீளமுள்ள தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு கல்லூரி மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தேசிய மாணவர் படையினர் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய மாணவர் படை அலுவலர் சுபா ராஜூ அதிகாரிகள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசித்தனர். அப்போது 675 அடி நீளம் கொண்ட தேசியக்கொடியினை கைகளில் ஏந்திய வண்ணம் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை தலைவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




