நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பு

நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் உள்ளது.

 

இந்நிலையில் நடிகர் சங்க விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. நடிகர் சங்க வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் 36வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.


Leave a Reply