சிஏஏ, என்ஆர்சி க்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இஸ்லாமியர்கள் போராட்டம்
சென்னையில் உள்ள குரளகம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையான இன்று சிறப்பு தொழுகையை முடித்த பின் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க குறளகம் பகுதி அருகே இஸ்லாமியர்கள் ஒன்றுகூடினர்.
இந்த சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பீகார் மாநிலத்தை போல தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




