விபத்தில் சிக்கிய “டூவீலருக்கு போலி இன்சூரன்ஸ்” ஆவணம் தயாரித்த சென்னை வாலிபர்- சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்

சேலத்தில் விபத்தில் சிக்கிய டூவீலருக்கு போலி இன் சூரன்ஸ் ஆவணத்தை தயாரித்து கொடுத்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் . இவரது டூவீலரை, அவரது நண்பர் குமார் கடந்த 2016ம் ஆண்டு வாங்கிச் சென்றார்.

 

அப்போது, தலை வாசல் சென்று விட்டு, சேலம் திரும்பிய போது, மணல்மேடு அருகே வந்த போது டூவீலர் விபத்தில் சிக்கியது. இந்த வாகனத்தை போலீசார் மீட்டு விசாரணை செய்தனர். இந்நிலையில், சுப்பிரமணியன், அவரது டூவீலருக்கு இன்சூரன்ஸ் ஏதும் செய்யாததால் சென்னை மாம்பாக்கத்தை சேர்ந்த பிரேம் பிரகாஷ் என்பவரிடம் தொடர்பு கொண்டார். அப்போது , பிரேம் பிரகாஷ் , தனியார் வங்கியின் மூலம் வழங்கப்பட்ட இன்சூரன்ஸ் ஆவணங்களை வழங்கினார்.

 

இதன் பின்னர்,சுப்பிரமணியன் சேலம் நீதி மன்றத்தில் தனது டூவீலர் விபத்தில்சிக்கிவிட்டது, இதற்கு ஏழு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது தனியார் வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி சேலம் நீதி மன்றத்தில் ஆஜராகி , தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இன்சூரன்ஸ் ஆவணம் போலியாக தயாரித்து வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

 

இந்த நூதன மோசடி குறித்து விஜய லட்சுமி சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் . அதன் பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . விசாரணையில், தனியார் வங்கியின் இன் சூரன்ஸ் நிறுவனத்தில் சேலம் முகவராக பிரேம் பிரகாஷ் பணியாற்றியுள்ளார். அப்போது ,விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு 1500 வாங்கிக்கொண்டு இன் சூரன்ஸ் ஆவணத்தை போலியாக தயாரித்து குமார் மற்றும் சுப்பிரமணியிடம் வழங்கியது தெரிந்தது.

 

இதையடுத்து போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் குமார் , சுப்பிரமணியம் , பிரேம் பிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த பிரேம் பிரகாஷ் , 2016ம் ஆண்டில் இருந்து தலைமறைவானார் . இவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலை மறைவாக இருந்து வந்த பிரேம் பிரகாஷ் சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரிந்தது . சேலத்தில் உள்ள நண்பரை நேற்று பிரேம்பிரகாஷ் பார்க்க வந்த போது போலீசார் , அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.


Leave a Reply