--- --:--:-- --

ஜூன் 1 முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம் நாடு முழுவதும் அமலாகிறது

1

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

 

பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் ஒரே ரேஷன் அட்டையை வைத்து பயனாளர்கள் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

 

முன்னதாக ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நாட்டிலுள்ள 12 மாநிலங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் ஒரே நேரத்தில் திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon