உபர் ஈட்ஸ் ஐ வாங்கிய ஜொமேட்டோ நிறுவனம்!

உபர் ஈட்ஸ் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை ஜொமாட்டோ நிறுவனம் வாங்கியுள்ளது. கால் டாக்சி, ஆட்டோ சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான உபர், இந்தியாவில் உள்ள தமது உபர் ஈட்ஸ் சேவையை அதன் நேரடிப் போட்டியாளரான ஜொமாட்டோ நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளது.

 

இதனால் உபேர் ஈட்ஸ் அளித்துவந்த சேவைகள், டெலிவரி பார்ட்னர்கள் பயனாளர்கள் அனைத்தும் ஜொமாட்டோ கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. கடந்த ஆண்டு 5.2 பில்லியன் வரை நஷ்டத்தை சந்தித்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்தனர்.

 

இந்தியாவில் உபேர் கால் டாக்சி சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.


Leave a Reply