மத்திய பிரதேசத்தில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட நான்கு அடுக்கு கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் நியாயநகர் விரிவாக்கம் அருகே அரசு நிலத்தில் நான்கு அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு இருந்தது.
இந்த கட்டடத்தை இடிக்கக் கோரி கடந்த 15ம் தேதி அதன் உரிமையாளருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இரண்டு நாட்கள் அவகாசம் முடிந்த நிலையில் அந்த கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
ஒரே நொடியில் சீட்டுக்கட்டு போல கட்டடம் தகர்ந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
மேலும் செய்திகள் :
மத்திய அரசை கண்டித்து 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி
ஆபரேஷன் சிந்தூர்: 7 MP-க்கள் குழுவை சந்திக்கும் மோடி!
இந்தியாவில் தீயாய் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்..!
சர்வதேச விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியரின் பயணம் திடீர் ஒத்திவைப்பு..!
பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000: சந்திரபாபு நாயுடு
ஜி7 உச்சி மாநாடு - மோடிக்கு கனடா பிரதமர் கார்னி அழைப்பு