பேரரசர் போல உடையணிந்து செய்தி வழங்கிய தொகுப்பாளர்

பாகிஸ்தானில் டிவி தொகுப்பாளர் ஒருவர் பேரரசர் போல உடையணிந்து செய்தி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளரான கபீஸ் கால்நடைகளிடம் நேர்காணல் நடத்துவது, கழுதை மீது சவாரி செய்து கொண்டே செய்திகள் சொல்வது என வித்தியாசமாக செய்திகள் வெளியிடுவதில் பிரபலமானவர்.

 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நாசர் கோட்டை வளாகத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த கலவரம் குறித்து பேரரசர் போன்று உடையணிந்து கபீஸ் செய்தி வழங்கினார். இந்த வீடியோவை பத்திரிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட சமூக வலைதளங்களில் அதிக பேரால் ரசிக்கப்பட்டு கவரப்பட்டு வருகிறது.


Leave a Reply