விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே ககன்யான் திட்டம்

இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் இந்த மாதத்தில் பயிற்சிக்காக ரஷ்ய அனுப்பப்படுவார்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்திற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு பேருக்கும், ரஷ்யாவின் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 

இதற்காக இம்மாதத்தின் இறுதியில் ரஷ்யா செல்லும் அவர்களுக்கு பதினோரு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ள ககன்யான் திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply