நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்துவது சந்தேகம்..! மு.க.ஸ்டாலின் கிண்டல்!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஆளும் அதிமுக அரசு நடத்துவது சந்தேகம் தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்துள்ளார் .

 
தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தொகுதி மாணவர்ளுடன் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார் மு.க.ஸ்டாலின் .பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தை பிறக்கிறது.
 

எனவே தமிழகத்திற்கும் விரைவில் வழி பிறக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வருவது உறுதி.

 

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் திமுகதான் ஜெயிக்கும். இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்துவது சந்தேகம் தான்.

 

கடந்த மக்களவைத் தேர்தலில் சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்றி ஜெயித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அப்படியானால் தேனியில் அல்வா கொடுத்தா ஜெயித்தீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது என்று மு.க.ஸ்டாலின் கிண்டலாக பேசினார்.


Leave a Reply