திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக கூறி நான்கு இளைஞர்களை அடித்து உதைத்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற மறைமுக தேர்தலுக்கு திருவாலங்காடு ஒன்றியத்தில் உறுப்பினர்கள் யாரும் வராததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதற்கு அதிமுகவினர் இரு பிரிவுகளாக இருப்பதாகவும், அதனால் ஒன்றிய குழு தலைவரை தேர்ந்தெடுப்பதில் போட்டி நிலவி வருவதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் திருவாலங்காடு ஒன்றியத்தில் 12வது வார்டு கவுன்சிலர் ஜீவா விஜயராகவனை நான்கு பேர் கொலை செய்ய வந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் அவர்களை பிடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தனிடம் கேட்டதற்கு அந்த நான்கு பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.






