சென்னையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி எட்டு மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மகாராஷ்டிராவை சேர்ந்த ரந்தோஷ், ஜானி தம்பதி தங்களுடைய எட்டு மாத ஆண் குழந்தையுடன் சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வந்தனர்.
ரந்தோஷ், ஜானியை நீண்ட நாள்களாக நோட்டமிட்ட பெண் ஒருவர் அந்தத் தம்பதியை அணுகி குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை கூறியிருக்கிறார். இதற்கு முன் குழந்தைக்கு உடல் பரிசோதனை செய்யவேண்டும் எனக் கூறி முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அந்தப் பெண் பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தம்பதியை கூட்டி சென்றுள்ளார்.
அங்கே பெற்றோரை ஓரிடத்தில் நிற்க வைத்துவிட்டு குழந்தையை தூக்கி சென்ற அவர் திரும்பி வரவே இல்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.