--- --:--:-- --

மேலாடையை கழற்று..! நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்!

8

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றபோது தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார் நடிகை மல்கா ரதுர். யார் அந்த தயாரிப்பாளர்? இச்சம்பவத்தின் பின்னணி என்ன? பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மல்கா ரதுர்.

 

விளம்பரப் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து பிரபலமடைந்த இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவித்திருந்தார். தாம் திரையுலகத்திற்கு வந்த காலத்தில் சினிமா வாய்ப்புக்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க முயன்றதாகவும், அவருக்கு தற்பொழுது 65 வயது எனவும் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார் மல்கா ரதுர்.

 

சினிமா குறித்து பேசிக்கொண்டிருந்த அந்த தயாரிப்பாளர் திடீரென மேலாடையை கழற்றுமாறு கூறியதாகவும், அதை கேட்டு என்ன செய்வதென்று புரியாமல் தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார் மல்கா ரதுர் தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் தம்மிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டி அவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் கூறியுள்ளார்.

கசப்பான அனுபவம் தனது வாழ்க்கையில் பெரும் வேதனையை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார் மல்கா ரதுர். திரையில் தோன்றும் நடிகைகளுக்கு தொழில்சார்ந்த நடிப்பு, நடனம் என பல சவால்கள் காத்திருந்தாலும் அதையும் தாண்டி சிலர் அளிக்கும் பாலியல் தொல்லைகள் பெரும் நெருக்கடியாக இருந்து வருவது மறுப்பதற்கில்லை. உஷா ஜாதவ், ராதிகாஆப்தே போன்ற பல நடிகைகள் பாலியல் புகார்களை அளித்த நிலையில் இந்த பட்டியலில் தற்போது மல்கா ரதுர் இணைந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon