ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினர் அனைவரும் தங்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் முன்பு அமர்ந்து வருவாய்த்துறை மாவட்ட துணைச் செயலாளர் சேதுராமன் தலைமையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் அவருக்குக் கீழ் பணிபுரியும் அலுவலர்களையும் வருவாய்த்துறையை அலுவலர்களையும் கடும் சொற்களால் திட்டுவதாகவும் அதற்கு பலமுறை மாவட்ட ஆட்சியரின் புகார் தெரிவித்தும் மாவட்ட ஆட்சியரும் மாறுதல் செய்வதாக கூறியதன் பேரில் கடந்த காலங்களில் போராட்டங்கள் கைவிடப்பட்டது என்றும் ஆனால் தற்போது அவர் மீண்டும் பணியில் வந்துள்ளார் என்றும் எனவே அவரை பணி மாறுதல் செய்ய வேண்டி அலுவலக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்கள்.
மாவட்ட வருவாய் அலுவலரை பணிமாறுதல் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்கள். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.