தமிழை வாழவைத்த அய்யன் வள்ளுவனுக்கு பொங்கல் பண்டிகையை நன்றி தெரிவிக்கும் ஒரு மரபாகவும், தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து உலக சாதனை படைக்கும் ஒரு நிகழ்வாக நோட்டு புத்தகங்களை கொண்டு திருவள்ளுவர் ஓவியத்தை உருவாக்கி உள்ளனர்.
உலக சாதனைக்காக படைக்கப்பட்ட இந்த திருவுருவ படத்தில், மொத்தம் 22,741புத்தகங்களை கொண்டும், 14வண்ணங்களை கொண்டும் இந்த திருவள்ளுவரின் உருவ படத்தினை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். பள்ளியின் நிர்வாகிகள் பூங்கோதை மற்றும் அருள் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் 170பேரின் கூட்டு முயற்சியில் இந்த உலக சாதனை நடைபெற்றது.
1114.82 சதுர அடி அளவு கொண்ட இந்த திருவள்ளுவரின் உருவ படத்தினை உருவாக்கி உலக சாதனை புரிந்துள்ளனர் மாணவர்கள். இந்த திருவுருவ படமானது மொசைக் திருவுருவ படமாகவும், இது வரை இது போன்ற சாதனை இந்தியாவில் ஏங்கேயும் பதிவிடபடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 2018ம்ஆண்டு அபுதாபியில் 702.8சதுரடியில் உருவாக்கி உள்ளது மட்டுமே சாதனையாக உள்ளது.
ஆனால், 1114.82 மீட்டர் திருவள்ளுவரின் திருவுருவ படத்தினை செய்து கோவை மாணவர்கள் முறியடித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் பூணம் ஸ்யால், மற்றும் மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.