வரும் 31-ந் தேதி கூடுகிறது நாடாளுமன்றம் பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. அடுத்த நாளான பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார்.

 

மத்தியில் பாஜக அரசு இரண்டாவது கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றது.மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன் கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. பின்னர் மீண்டும் ஆட்சியமைந்தவுடன், புதிதாக நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதலாவது பட்ஜெட்டை கடந்த ஜுலை மாதம் 3-ந்தேதி நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்.

 

இந்நிலையில் 2020-21 டம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்காக நாடாளுமன்ற கூட்டத் தொடர் இம்மாதம் 31-ந் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். மறுதினம் பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார்.

 

நாட்டின் பொருளாதார நிலை, ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்து வரும் நிலையில், அதனை சரிக்கட்ட இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply