--- --:--:-- --

திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆடிப் பெருக்கு சிறப்பு வழிபாடு!

f5871a3e-e529-4f94-81fa-b90b0398bef1

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற  கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரம்: ஆடிப் பெருக்கு நன்னாளை முன்னிட்டு, கொண்டத்து காளியம்மன் வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரம்மாண்டமான சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

ஆடிப் பெருக்கு தினமான இன்று, இப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon