ராசியான இந்தூர் மைதானம் – 2-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!!

இந்தூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.கவுகாத்தியில் நடைபெற்ற முதலாவது போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி இந்தூரில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய இந்திய வேகப் புயல் பும்ரா, ஷர்குல் தாகூர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் வேகத்தில் மிரட்ட இலங்கை வீரர்கள் திணறினர். சுழலில் வாஷிங்டன் சுந்தரும், குல்தீப் யாதவும் அசத்தினர்.

 

இதனால் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா 34 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் ஷர் குல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் நவ்தீப் சைனி, குல்திப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

 

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுலும் ஷிகர் தவானும் அதிரடி காட்டி மளமளவென ரன் குவித்தனர்.இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் 45 ரன்கள் எடுத்திருந்த ராகுல் அவுட்டானார்.

 

அடுத்த தவானும் 32 ரன்களில் அவுட் ஆக, ஸ்ரேயாஸ் ஸ்ரேயாஸ் -கேப்டன் கோஹ்லி ஜோடி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது. இறுதியில் இந்திய அணி, 47.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. கோஹ்லி அவுட்டாகாமல் 30 ரன்களும் ஸ்ரேயாஸ் 32 ரன்களும் எடுத்தனர்.

 

வேகத்தில் மிரட்டி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நவ்தீப் சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் இந்தூர் மைதானம் இந்தியாவுக்கு எப்போதுமே ராசியான மைதானம் என்பது இந்த போட்டியிலும் நி௹ பணமானது இங்கு இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட இத்தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசிப் போட்டி வரும் 10-ந் தேதி புனேவில் நடக்கிறது. இதிலும் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை படைக்கவுள்ளது.


Leave a Reply