நிர்பயா வழக்கு : ஜனவரி 22ல் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட உத்தரவு

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை வரும் 22ஆம் தேதி தூக்கிலிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

ஒருவர் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே அக்ஷய், பவன், வினை சர்மா, முகேஷ் ஆகிய நால்வரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

 

அதனைத் தொடர்ந்து நால்வரின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குற்றவாளிகளில் ஒருவரான வினை சர்மா டெல்லி அரசுக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

 

இதையடுத்து நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அப்பெண்ணின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் 4 பேரையும், ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply