புதிய புத்தாண்டு நியூஸிலாந்தில் தொடங்கியது. அங்கேயே கலர்கலரான வாணவேடிக்கைகள், வானில் வெடித்து வெளிச்சத்தை வேடிக்கை பார்க்க உலகமே திரண்டு அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தது. பலர் வான வேடிக்கையை வேடிக்கை பார்த்தார்கள்.
ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வேடிக்கை பார்த்தது இந்த வான வேடிக்கையை அல்ல. ஹர்திக் பாண்டியாவை, அவர் தன் காதலியுடன் நிச்சயதார்த்தத்தில் இன்பமாக மூழ்கியிருந்தார். டைட்டானிக் படத்தில் வரும் நாயகன் ஜாக் போல அவர் கப்பலில் தனது காதல் ஜோடியுடன் மிதந்தார்.
ஹாலிவுட் ஸ்டைலில் அவர் தன் காதலிக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்த காட்சியை கண்டு ஆச்சரியப்பட்டது அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, பாண்டேயாவின் அம்மா அப்பாவும் தான். இந்த நிச்சயதார்த்த ஏற்பாடு குறித்து அவர்களுக்கு தகவலே கொடுக்கப்படவில்லை என அவர் அடுத்த நாள் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார்.
இந்த ஜோடியின் திடீரென்று நிச்சயதார்த்தம் குறித்து அவரது தந்தை சொன்ன விஷயம் சாதாரணமானது அல்ல, எல்லாம் ஷாக் ரகம். நடாஷா ஒரு நல்ல பெண் நாங்கள் அவளை மும்பையில் பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறோம். அவர்கள் துபாய்க்கு விடுமுறைக்கு செல்கிறார்கள் என்பதுதான் நாங்கள் அறிந்தது. ஆனால் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது எங்கள் குடும்பத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பின்னர்தான் அதைப்பற்றி நாங்கள் அறிந்தோம் என்று பம்பாய் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஹர்திக்கின் தந்தை பேட்டி அளித்துள்ளார். காதல் பற்றி சில காலங்களாகவே கிசுகிசுக்கள் பத்திரிகையில் வெளியாகி இருந்தாலும் அது வதந்தி என்றே கூறப்பட்டது.
ஆட்டத்தின்போது அடிபட்டு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக் மீண்டும் வந்து கிரிக்கெட் ஆட்டத்தில் அதிரடி காட்டுவார் என நினைத்துக் கொண்டிருந்தபோது அவர் அதிரடி காட்டியது ஆட்டத்தில் இல்லை. தொடங்கப் போகும் புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில். ஒரு த்ரில்லர் நாவலைப் போல இயர் எண்டிங்கில் ஒரு பஞ்ச் வைத்தார்.
நடிகை நடாஷா உடன் ஹர்திக் செய்துகொண்ட நிச்சயதார்த்தம் உண்மையா இல்லையா என பலரும் சந்தேக கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த வேளையில் அது உண்மைதான் என்பதற்கு ஹர்திக் கொடுத்த ஒரு குளு இன்ஸ்டாவில் இடம்பெற்றிருந்தது.
மை தேரா துமேரி ஜானு சாரா ஹிந்துஸ்தான் என சின்னதாக ஒரு செய்தி போட்டவர் புத்தாண்டின் தேதியையும் வருடத்தையும் குறித்து எழுதியிருந்தார். அவர் ஹிந்தியில் எழுதிய வசனம் வெரி சிம்பிள். அதாவது நான் உனக்கு நீ எனக்கு இதுதான் அவர் போட்ட வாசகத்திற்கு தமிழ் அர்த்தம். அதைப் பார்த்ததால் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று உறுதி செய்துகொள்ள முடிந்தது.