அம்மா, பாட்டியுடன் செல்ஃபி எடுத்து அனுப்பும் பெண்ணுக்கு பரிசு

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அம்மா மற்றும் பாட்டியுடன் செல்ஃபி எடுத்து அனுப்பும் பெண்ணுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். வருகிற ஜனவரி 24ஆம் தேதியன்று பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

 

இந்நாளில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் பேட்டி பச்சோ, பேட்டி பதோ என்ற முகநூல் மூலமோ அல்லது 7 3 9 7 2 8 5 6 4 3 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவும் தங்களது பாட்டி மற்றும் அம்மாவுடன் பெண்கள் எடுத்த செல்பி புகைப்படத்தை வருகிற 13-ஆம் தேதிக்குள் எடுத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply