‘ஆல் இஸ் வெல்’ – ஈரான் தாக்குதல் குறித்து ட்ரம்ப் ட்விட்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஆல் இஸ் வெல் என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

ஈரான் உளவுப்பிரிவு தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டது முதலில் அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. இச்சூழலில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் நடத்திய தாக்குதல் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இதுவரை எல்லாம் சரியாகவே செல்கிறது என கூறியுள்ள டிரம்ப் உலகிலேயே மிக பலம் வாய்ந்த ராணுவம் தங்களிடம் இருப்பதாக மீண்டும் கூறியுள்ளார். ஆல் இஸ் வெல் என்றும் பதிவிட்டுள்ளார். நாளை இது தொடர்பாக முக்கிய அறிக்கையை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.


Leave a Reply