சூப்பர் ஸ்டார் ஆகிறாரா விஜய்?

2019 ஆம் ஆண்டில் வசூல் மன்னனாக 300 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் விஜய். நடிக்க தெரியாதவன் நாளைய தீர்ப்பில் நடிக்கிறார் என்ற விமர்சனங்களில் தொடங்கிய விஜய்யின் வாழ்க்கை இன்று அவரை 300 கோடி ரூபாய் வசூல் நாயகனாக மாற்றியுள்ளது.

 

தமிழ் படங்களின் வசூல் மன்னனாக கூறிவரும் ரஜினிகாந்தை அப்படியே பின் தொடர்பவர் என அறியப்படும் விஜய், 2019 ஆம் ஆண்டில் ரஜினியை முந்தி அதிக வசூலை குவித்துள்ளார். பிளாக்பஸ்டர்களால் கோலிவுட்டில் கோல் ஊற்றி வரும் விஜய், படத்திற்கு படம் வசூலை அதிகம் ஈட்டி வருகிறார்.

 

மாஸ்டர் படத்தில் பிஸியாக உள்ள விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு இந்த படத்திற்காக தமது ஊதியத்தையும் விஜய் பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை விட விஜய் அதிக ஊதியம் பெற உள்ளதாகவும் பேசப்படுகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசப்பட்டு வந்த விஜய் தற்போது சூப்பர் ஸ்டாரையே முந்தி விட்டதாக அவரது ரசிகர்கள் சிலாகித்து தள்ளுகின்றனர்.

 

பி சி சென்டர்களில் அதிக வசூலை குவிப்பவரான விஜய் துப்பாக்கி படத்திலிருந்து நூறு கோடி ரூபாய்க்கும் மேலான வசூலால் மார்க்கெட் பல மடங்கு உயர்த்தியுள்ளார். அதோடு ரஜினிகாந்தை போன்று தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் ஆதர்ச நாயகனாக திகழும் விஜய் அவருக்கான வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்தி கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அரியணையை நோக்கி முன்னேறி இருப்பதாகவும் துறையினரால் புகழப்படுகிறார்.


Leave a Reply