இந்தியா மாற்றும் இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இந்தூரில் இன்று நடை பெறுகிறது. முதலாவது போட்டி மழையால் ரத்தான நிலையில், 3 போட்டி தொடரை வெல்ல இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இந்தியா வந்துள்ள மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
நேற்று முன்தினம் கவுகாத்தியில் நடைபெற்ற, 2020-ம் ஆண்டின் முதல் மற்றும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.
மேலும் பிட்ச் மழையால் ஈரமாக, அதனை ஹேர் டிரையர்,அயன் பாக்ஸ் கொண்டு உலர வைக்க முயன்ற சம்பவம் பெரும் கேலிக்கூத்தானது.
இந்நிலையில் 2-வது போட்டி இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியிலும் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா களமிறங்கவில்லை அவருக்குப் பதில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மற்றொரு அதிரடி வீரர் ஷிகர் தவான் களமிறங்குகிறார்.
டி20 தொடர்களில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, இந்தத் தொடரையும் கைப்பற்ற இன்றைய போட்டியில் வெல்ல வேண்டியது அவசியம். இலங்கை அணியோ, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான, டெஸ்ட், ஒரு நாள் , டி20 என எந்தப் போட்டியிலும் வெற்றி பெறாத சோகத்தில் உள்ளது.
இன்றும் அந்த சோகம் தொடருமா? அல்லது முறியடிக்குமா? என்பதும் தெரிந்துவிடும்.