அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக ரூ.3000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப் படுவது வழக்கம். இந்த ஆண்டும் இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களாக பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக அரசு ஊழியர்கள், அரசு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ரூ. 3000 போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தற்காலிக பணியாளர்கள், மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.1000 போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 500 வழங்கப்படும் எனவும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டும்இதே அளவுக்குத்தான் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.