அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வணிகத்தில் 22 காசு உயர்ந்துள்ளது. நேற்றைய அன்னிய செலவாணி வணிக முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலர் எழுபத்தி ஒரு ரூபாய் 93 காசாக இருந்தது.
அது இன்றைய வர்த்தக முடிவில் 71 ரூபாய் 71 காசாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் அது 1.23 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஈரானின் கலாச்சார முக்கியத்துவம் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில் அதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்தது.
கலாச்சார மையங்களை தாக்கக் கூடாது என்பதில் சர்வதேச விதியாக இருக்கும் நிலையில் தலைமையகத்தின் விளக்கத்தை அடுத்து பதற்றம் சிறிது தணிந்ததால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.