மாணவியின் பேச்சை கேட்டு மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுத நடிகர் சூர்யா

அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் மாணவி ஒருவரின் பேச்சை கேட்டு நடிகர் சூர்யா மேடையிலேயே கண்கலங்கி அழுத காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

 

சென்னை தியாகராயநகரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கட்டளை நிறுவனரும், நடிகருமான சூர்யா பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் உரையாற்றிய மாணவி ஒருவர் தன் வாழ்வில் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்து உருக்கமாக பேசிக் கொண்டிருந்தார்.

 

அதைக்கேட்டு கலக்கமடைந்த நடிகர் சூர்யா பத்து நிமிடங்களுக்கு மேலாக கண் கலங்கிய படியே அமர்ந்திருந்தார். ஒருகட்டத்தில் கதறி அழ தொடங்கி அவர் எழுந்து சென்று மாணவியை தேற்றிய காட்சி அரங்கத்தில் இருந்தவர்களை நெகிழச் செய்துள்ளது.


Leave a Reply