பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து நடக்கும் தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் நானாசாகிப்பில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டு தலமான குருத்வாரா மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

 

இதனிடையே பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்க்கணி என்ற பகுதியில் ரவீந்திரசிங் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் செய்தியாளர் ஹர்மித் சிங் என்பவரின் சகோதரர் என்று கூறப்படுகிறது.

 

தனது திருமணத்திற்காக பொருட்களை வாங்க சென்றபோது ரவீந்திர சிங் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அங்கு வசிக்கும் சீக்கியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவிட்டுள்ள டுவிட்டரில் கடத்தல், கட்டாய மதமாற்றம் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக ஷாகித் கபூர் என்ற சீக்கிய பெண்ணை மதமாற்றம் செய்து கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்திய சுட்டிக்காட்டியுள்ளது.


Leave a Reply