--- --:--:-- --

வெற்றி பெற்ற வேட்பாளர் மணிவேல் திடீர் மரணம்

10

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவராக போட்டியிட்டு தேர்வு பெற்ற சுயேட்சை வேட்பாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட மணிவேல் என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் சுப்பிரமணியை விட 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வெற்றி செய்தியுடன் வீட்டுக்கு சென்ற அவருக்கு சால்வை அணிவித்து அதன் வீடியோ பதிவை டிக் டாக் செயலியில் வெளியிட்டு உறவினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

 

இந்நிலையில் திடீரென உடல்நிலை குன்றியதால் அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் ஆலத்தூர் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon