முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஜாக்பாட் : 2 மனைவிகளும் வெற்றி

வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இரு மனைவிகளும் ஊராட்சி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த வலூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் அந்த பகுதியில் இரு மனைவிகளோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

கடந்த முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த தனசேகர் இந்த முறை மனைவி செல்வியை கிராம தலைவர் பதவிக்கும், மற்றொரு மனைவியான காஞ்சனாவை கோவில் குப்பம் கிராம தலைவர் பதவிக்கும் போட்டியிட வைத்தார். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் படி தனசேகரின் மனைவி செல்வி மற்றும் காஞ்சனா ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.


Leave a Reply