பிரபல இந்தி பின்னணிப் பாடகி அனுராதா பொதுவால்… என்னுடைய தாய்!

பிரபல ஹிந்தி பின்னணி பாடகி அனுராதா பொதுவால் தமது தாய் என்று கூறி கேரள பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

திருவனந்தபுரத்தை சேர்ந்த கர்மலா மொடக்ஸ் சென்ற பெண் தான் நான்கு மாத குழந்தையாக இருந்த போது அனுராதா பொதுவால் கேரள தம்பதியிடம் ஒப்படைத்ததாக கூறியுள்ளார். தம்மை வளர்த்த தந்தை பொன்னச்சன் என்பவர் மரணப்படுக்கையில் இந்த உண்மையை தெரிவித்தார் என்று கூறியுள்ள அவர், இளம் பருவத்தில் தம்மை வளர்க்க மறுத்த அனுராதா பொதுவால் மற்றும் அவரது கணவர் அருண் ஆகியோர் 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருவனந்தபுரம் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவர்களின் சொத்துக்களை விற்க தடை கூறியுள்ள கர்மலா மொடக்ஸ் டிஎன்ஏ சோதனை செய்யவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply