ஜன.5 வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

 

வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் தமிழகபகுதியில் சந்தித்துக் கொள்வதால் பரவலாக மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ,நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழை வரும் 5ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதுவரை லேசான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply