பிரதமர், அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் நெல்லைக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரிடம் விசாரிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முடிவெடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது.

 

அதில் பங்கேற்று பேசிய நெல்லைகண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக அக்கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அவருக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply