ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் மூலம் வாக்களித்த பெரும்பாலான வாக்குகள் செல்லாது என நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. , ஊராட்சி ஒன்றிய வார்டுகள் வாரியாக, ஒவ்வொரு சுற்றாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தேர்தல்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் மூலம் வாக்களித்த தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் பெரும்பாலான வாக்குகள் செல்லாது என நிராகரிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில், ஒரு ஒன்றிய கவுன்சிலர் வார்டில் 60 தபால் வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாது என நிராகரிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 116 தபால் வாக்குகளில் 86 வாக்குகள் செல்லாது என தள்ளுபடி செய்யப்பட்டது. இது போல் பல இடங்களில் தபால் வாக்குகளில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்ட தகவல் வெளியாகி வருகிறது.
தபால் வாக்கு அளிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை முறையாக ஒப்படை க்காமல் தபால் வாக்கு போட்டதாகக் கூறி, ஓட்டு எண்ணிக்கை அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களே இப்படி செல்லாத ஓட்டுக்களை போட்டுள்ளது விநோதம் தான்.