உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்தில் முதல் முறையாக “திருநங்கை” வெற்றி பெற்று சாதனை!!
உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கை ஒருவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளார். திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் திருநங்கை ரியா என்பவர் போட்டியிட்டார். இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை ரியா படைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




