--- --:--:-- --

உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்காமல் முறைகேடு நடக்கிறது..? மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!!

7

உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த வார்டுகளில் முடிவை அறிவிக்காமல் தாமதம் செய்வதாகவும், முறைகேடுகள் செய்ய அதிமுக திட்டம் போட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம் நேரில் முறையிட்டு புகார் தெரிவித்த மு.க.ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பம். ஆரம்பம் முதலே மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சில் வார்டுகளில் திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்க தொங்கியது.

 

பல வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும் திமுக வெற்றி பெற்ற வார்டுகளில் முடிவு அறிவிக்காமல் தாமதம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து, திமுக வெற்றி பெற்ற இடங்களில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட சதி செய்வதாகவும், உடனடியாக முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை முறைகேடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். அதிமுகவின் முறைகேடுகளைப் பற்றி ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினோம். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாட தயாராக உள்ளோம் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon