உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: போதையில் தள்ளாடியபடி பணிக்கு வந்த அரசு ஊழியர்…!!

ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு இடுப்பில் மது பாட்டிலுடன், போதையில் தள்ளாடியபடி வந்த அரசு ஊழியர் ஒருவரை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து, வீட்டுக்கு திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், தமிழகம் முழுவதும் 315 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டாலும், பல குளறுபடிகளால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது தாமதமானது.

 

வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடந்த சில சுவாரஷ்யங்களை பார்ப்போம் :

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில், பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு காலை உணவாக இட்லிப் பொட்டலம் வழங்கப்பட்டது .அதில் இட்லியுடன் சட்னி மட்டுமே இருந்தது. இதனால் இட்லிக்கு சாம்பார் எங்கே? என்று கேட்டு ஊழியர்கள் அடம் பிடித்ததால் ஓட்டு எண்ணிக்கை தொடங்க தாமதமானது.

 

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையத்தின், போதையில் பணிக்கு வந் அரசு ஊழியரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவருடைய இடுப்பிலும் மதுபாட்டில் இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த ஊழியரின் தேர்தல் பணி உத்தரவை ரத்து செய்த அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பினர்.

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையம் அருகே காட்டெருமைகள் கூட்டமாக முற்றுகையிட்டன. இதைக் கண்டு வாக்கு எண்ணிக்கையில் மும்முரமாக இருந்த அதிகாரிகளும், வேட்பாளர்களின் ஏஜன்டுகளும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை விரட்டியடித்தனர். இதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.


Leave a Reply