முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த வெளிநாட்டு டூர்…!!ஜூன் மாதம் சீனா செல்கிறார்…!!

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜுன் மாதம் சீனாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், அமெரிக்கா, பிரிட்டன், துபாய் போன்ற நாடுகளுக்கு 13 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் தமிழக அமைச்சர்கள் சிலரும் சென்றனர். இந்தப் பயணத்தில், அந்நாடுகளில் உள்ள தொழில் அதிபர்கள் பலரைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டது.

 

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் முதல்வர் எடப்பாடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திப்பு நடத்தினர்.அப்போது, தமிழகத்தின் கலாச்சாரம், அன்பான உபசரிப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் வெகுவாக புகழ்ந்ததுடன், சீனா சென்ற பின் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கடிதமும் எழுதியிருந்தார்.

 

இதன் தொடர்ச்சியாக, சீன நாட்டின் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த மாதம், தமிழக அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் தொடர்ச்சியாக தமிழக அதிகாரிகளும் சீனா சென்று வந்தனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜுன் மாதம் சீனா செல்ல உள்ளதாகவும், அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க இந்தப் பயணம் மேற்கொள்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply