ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள்! இருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக்கில் அதிவேகமாக சென்ற இரண்டு பேர் லாரியில் மோதி உயிரிழந்தனர். அருகுவிளை பகுதியை சேர்ந்த சுனில், அஜய், கண்ணன் மற்றும் ராஜீவ் ஆகிய நான்கு இளைஞர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து வடசேரி செல்லும் சாலையில் அதிவேகமாக சென்றனர்.

 

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுனில் மற்றும் அவரது சகோதரர் அஜய் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Leave a Reply